அனைத்துப் பராமரிப்பு வழிகள்பராமரிப்பு வழி 01 இல் 04

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை

உயிருடன் உள்ள அல்லது இறந்த தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான சிறுநீரகம் அறுவைச் சிகிச்சை மூலம் உங்கள் உடலில் பொருத்தப்படுகிறது.

மேலும் அறிய
இங்கே தொடங்குங்கள்

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை என்றால் என்ன?

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில், உங்கள் சிறுநீரகங்கள் செய்ய முடியாத பணிகளைச் செய்ய தானமளிப்பவரின் ஆரோக்கியமான சிறுநீரகம் உங்கள் உடலில் பொருத்தப்படுகிறது. மாற்றுச் சிறுநீரகம் இரத்தத்தை வடிகட்டி, கழிவுகளையும் அதிகப்படியான திரவத்தையும் அகற்றி, உடலின் இயல்பான செயல்பாடுகளைப் பராமரிக்க உதவுகிறது.

மேலும் அறிய

விரிவான மருத்துவ மதிப்பீட்டுக்குப் பிறகே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை உங்களுக்கு பொருத்தமா என்பதைத் தீர்மானிக்க முடியும். உயிருடன் இருக்கும் அல்லது இறந்த தானமளிப்பவரிடமிருந்து பொருத்தமான சிறுநீரகம் கிடைக்க வேண்டும்; காத்திருக்கும் காலம் மாறுபடலாம்.

சிகிச்சைஓர் அறுவைச் சிகிச்சை
முன்னதாகசிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மதிப்பீடு
பின்னர்தினசரி மருந்துகளும் தொடர் கண்காணிப்பும்
தானச் சிறுநீரகம் எங்கிருந்து கிடைக்கலாம்

உயிருடன் உள்ள தானமளிப்பவர் அல்லது இறந்த தானமளிப்பவர்

தானச் சிறுநீரகம் உயிருடன் இருக்கும் ஒருவரிடமிருந்தோ அல்லது இறந்த ஒருவரிடமிருந்தோ கிடைக்கலாம். தானச் சிறுநீரகத்தையும் அதைப் பெறும் நபரையும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக் குழு கவனமாக மதிப்பிடும்.

உயிருடன் இருக்கும் ஒருவரிடமிருந்து ஒரு சிறுநீரகம்

உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை

ஆரோக்கியமான ஒரு நபர் தனது விருப்பத்துடன் ஒரு சிறுநீரகத்தைத் தானமாக வழங்க முன்வரலாம். தானமளிப்பவரின் உடல்நலத்தைப் பாதுகாக்க அவர் தனியாக மதிப்பிடப்படுவார்.

  • தானமளிப்பவரும் பெறுபவரும் விரிவான பரிசோதனைகளைச் செய்வார்கள்.
  • தானமளிப்பவரும் பெறுபவரும் மருத்துவ ரீதியாகப் பொருத்தமானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அறுவைச் சிகிச்சை திட்டமிடப்படும்.
  • தானமளிப்பவருக்கும் பெறுபவருக்கும் தொடர் கண்காணிப்பு வழங்கப்படும்.
மரணத்திற்குப் பிறகு தானமாக வழங்கப்பட்ட சிறுநீரகம்

இறந்த தானமளிப்பவரிடமிருந்து சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை

ஒருவர் இறந்த பிறகு, சம்மதத்துடனும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைத் திட்டத்தின் விதிகளின்படியும் ஒரு சிறுநீரகம் தானமாக வழங்கப்படலாம்.

  • பெறுபவர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மதிப்பீட்டை நிறைவு செய்வார்.
  • பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கும்போது இணக்கத்தன்மை பரிசோதிக்கப்படும்.
  • காத்திருக்கும் காலம் உறுதியானதல்ல; சிறுநீரகம் வழங்கப்படும்போது குழு உங்களைத் தொடர்புகொள்ளும்.
செயல்முறை

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எவ்வாறு நடைபெறும்

ஒவ்வொருவருக்கும் பாதை மாறுபட்டாலும் பொதுவாக நான்கு பகுதிகள் உள்ளன.

01

மதிப்பீடு

அறுவைச் சிகிச்சையும் நீண்டகால சிகிச்சையும் உங்களுக்குப் பொருத்தமா என சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக் குழு பரிசோதிக்கும்.

02

தானமளிப்பவர் மற்றும் பொருத்தம்

உயிருள்ள தானமளிப்பவர் மதிப்பிடப்படலாம்; அல்லது இறந்த தானமளிப்பவரின் சிறுநீரகத்திற்காக நீங்கள் கருதப்படலாம்.

03

அறுவைச் சிகிச்சை

தானச் சிறுநீரகம் அடிவயிற்றில் வைக்கப்பட்டு உங்கள் இரத்த நாடி நாளங்களுடனும் சிறுநீர்ப்பையுடனும் இணைக்கப்படும்.

04

தொடர்ச்சியான பராமரிப்பு

தொடர்ந்த இரத்தப் பரிசோதனைகளும் நிராகரிப்பைத் தடுக்கும் மருந்துகளும் மாற்றுச் சிறுநீரகத்தைப் பராமரிக்க உதவும்.

சிகிச்சைக்கு முன்

தயாராகும் போது செய்யப்படக்கூடியவை

  • இரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன்கள், இதயம் நுரையீரல் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் தொற்று நோய்களுக்கான பரிசோதனை
  • உங்கள் மருந்துகள், பிற உடல்நிலைகள் மற்றும் முந்தைய அறுவைச் சிகிச்சைகளின் மதிப்பீடு
  • உயிருடன் உள்ள மற்றும் இறந்த தானமளிப்பவர்களிடமிருந்து சிறுநீரகம் பெறும் வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடல்
  • அறுவைச் சிகிச்சை, குணமடைதல், மருந்துகள் மற்றும் தொடர் கண்காணிப்பைப் புரிந்துகொள்ள நேரம்
அன்றாடப் பராமரிப்பு

அன்றாட வாழ்க்கையில் கவனிக்க வேண்டியவை

  • மாற்றுச் சிறுநீரகம் செயல்பட நிராகரிப்பைத் தடுக்கும் மருந்துகள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்
  • இரத்தப் பரிசோதனைகளும் மருத்துவச் சந்திப்புகளும் ஆரம்பத்தில் அடிக்கடி நடக்கும்.
  • இந்த மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதால், தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். மற்ற பக்கவிளைவுகளும் ஏற்படலாம் என்பதால், அவற்றைக் கவனிப்பது முக்கியம்.
  • உணவு, உடற்பயிற்சி, வேலை மற்றும் பயண ஆலோசனை உங்கள் குணமடைதலுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ப அமைக்கப்படும்

நோயாளிகள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்

கேள்வியைத் தெரிவு செய்து சுருக்கமான பதிலைப் பாருங்கள் அல்லது முழுக் கேள்வி வழிகாட்டிக்குச் செல்லுங்கள்.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை உங்களுக்கு பாதுகாப்பாகவும் பொருத்தமாகவும் இருக்குமா என்பதை அறிய, சிறுநீரக பராமரிப்புக் குழு உங்கள் ஒட்டுமொத்த உடல்நிலையை மதிப்பிடும். உங்கள் இதயம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள், தொற்றுகள், தற்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் அறுவைச் சிகிச்சையைத் தாங்கக்கூடிய உடல்நிலை ஆகியவை கவனிக்கப்படும்.

மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மாற்றுச் சிறுநீரகத்தை உடல் நிராகரிக்காமல் தடுக்கும் மருந்துகளை நீண்டகாலம் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதையும் குழு உங்களுடன் கலந்துரையாடும். இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தேவையான பரிசோதனைகள் செய்யப்படும்.

சிறுநீரகம் தானம் செய்ய தாமாக முன்வரும் ஆரோக்கியமான வயது வந்த ஒருவர், தானமளிப்பதற்கு பொருத்தமானவரா என்பதை அறிய மதிப்பீடு செய்யப்படலாம்.

தானமளிப்பவரின் உடல்நலமும் விருப்பமும் பாதுகாக்கப்படுவதற்காக, அவருக்கு தனிப்பட்டும் இரகசியமாகவும் மதிப்பீடு செய்யப்படும். சிறுநீரகம் தானம் செய்வது அவருக்கும் சிறுநீரகம் பெறுபவருக்கும் பாதுகாப்பாகவும் பொருத்தமாகவும் இருக்குமா என்பதும் இந்த மதிப்பீட்டில் பார்க்கப்படும்.

மதிப்பீட்டிற்கு வருவது தானம் செய்வதாக முடிவு செய்துவிட்டீர்கள் என்று பொருளல்ல; மதிப்பீட்டின் முடிவில், சிறுநீரகம் தானம் செய்ய முடியாமலும் போகலாம்.

எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை முன்கூட்டியே துல்லியமாகக் கூற முடியாது. உங்கள் இரத்த வகை, பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பது, மருத்துவ ரீதியான பொருத்தம் மற்றும் சிறுநீரக ஒதுக்கீட்டு விதிமுறைகள் போன்ற பல காரணிகள் காத்திருக்கும் காலத்தைப் பாதிக்கலாம்.

நீங்கள் காத்திருக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அடுத்ததாக என்ன நடக்கும் மற்றும் சிறுநீரகம் கிடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக் குழு உங்களுக்கு விளக்கும்.

மேலும் கேள்விகளைப் பார்க்க
உங்கள் ஆலோசனைச் சந்திப்பு

உங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வாருங்கள்.

அவர்களும் அதே தகவல்களைப் புரிந்துகொண்டு, முக்கிய விடயங்களை நினைவில் வைத்துக்கொண்டு, உங்கள் அடுத்த படிகளைத் திட்டமிட உதவலாம்.

AKCCக்கு தயாராகுங்கள்
மேலும் அறிய

அடுத்த பராமரிப்பு வழி

வயிற்றுப்படல டயாலிசிஸ்